search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பஸ்"

    • பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது.
    • செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 60க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.பஸ் கணியூர் அடுத்த சோழமாதேவி அருகே சென்று கொண்டிருந்து. அப்போது செங்கல் லோடு ஏற்றி வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் பஸ்ஸில் இருந்த பயணிகளும் லாரியின் முன்புறம் இருந்த தொழிலாளர்கள் என 20 பேர் இடிப்பாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்கள் மீட்டு கோவை மற்றும் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது.
    • பஸ் மீது மோதுவது போல் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது.

    பல்லடம் :

    திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் பிரிவு அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்து பஸ் மீது மோதுவது போல் ஒரு மோட்டார் சைக்கிள் சென்றது.

    இதனைப் பார்த்த பஸ் கண்டக்டர் பரமசிவம், பார்த்து மெதுவாக போ, என சத்தம் போட்டதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர், பஸ்ஸின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி கண்டக்டரிடம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாய்த்தகராறு முற்றி கண்டக்டர் பரமசிவத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பஸ்சில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் பல்லடம் அண்ணா நகரைச் சேர்ந்த சலிம் மகன் சாகுல் அமீது(22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வேப்பூர் அருகே தனியார் பஸ் மீது லாரி மோதலில் 20 பயணிகள் காயம் அடைந்தனர்.
    • பஸ் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தது.

    கடலூர்:

    சின்னசேலத்தில் இருந்து விருத்தாச்சலம் நோக்கி நேற்று காலை 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்றது. பஸ் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தபோது. அப்போதுபஸ்சின் பின்னா ல் வந்த சரக்கு லாரி டிரைவ ரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ்ஸின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். லாரி பஸ் மீது வேகமாக மோதியது பஸ்சின் பின்புறம் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் விபத்துக்குள்ளான பஸ் லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்புகளுக்கு உள்ளானது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து பணியாற்றி வருகின்றனர்.
    • பேருந்தில் வந்த பயணிகள் இரு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை சமாதானப்படுத்தி இருவரையும் கலைத்து விட்டனர்.

    திருப்பூர் :

    பின்னலாடை நகரான திருப்பூரில் அதிக அளவிலான வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்திலிருந்து ெரயில் மூலமாகவும், பேருந்துகள் மூலமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூருக்கு வந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருப்பூர் - ஊத்துக்குளி சாலை இரண்டாவது ெரயில்வே கேட் அருகில் ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு வந்து 2 தனியார் பேருந்துகள் வந்தது.

    நேரம் பிரச்சனை தொடர்பாக ஒரே சமயத்தில் வந்ததால் நடு ரோட்டில் பஸ்களை நிறுத்தி விட்டு டிரைவர்மற்றும் கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது கடைசியில் மோதலாக மாறியது.

    இதையடுத்து பேருந்தில் வந்த பயணிகள் இரு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை சமாதானப்படுத்தி இருவரையும் கலைத்து விட்டனர். இதையடுத்து இருவரும் பேருந்தை எடுத்துச் சென்றனர். தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சண்டையிட்டு கொண்டதால் ஊத்துக்குளி சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.  

    ×